தமிழ்நாடு

tamil nadu

அமீரகத்தில் செயல்பாட்டை தொடங்கிய முதல் அணுமின் நிலையம்!

By

Published : Aug 2, 2020, 11:53 AM IST

துபாய்: ஐக்கிய அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் அணுமின் நிலையம் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

Emirati nuclear plant successfully starts up first reactor
Emirati nuclear plant successfully starts up first reactor

எவ்வித சுற்றுச்சூழல் மாசையும் ஏற்படுத்தாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முதல் தேர்வாக இருப்பது அணுமின் நிலையங்கள்தான்.

அணுக்கழிவுகள், பாதுகாப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய அணு உலைகளை அமைக்க பல்வேறு நாடுகளும் தயக்கம்காட்டிவருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் அணுமின் நிலையம் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் இந்த அணுமின் நிலையம் அமைந்துள்ளது. தென் கொரியாவின் உதவியுடன் சுமார் 20 பில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம்தான், அரேபிய தீபகற்பத்தில் கட்டப்பட்ட முதல் அணுமின் நிலையம் ஆகும்.

இந்த அணுமின் நிலையத்தில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறப்போவதில்லை என்று ஐக்கிய அமீரகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அமீரகத்தின் இந்த அறிவிப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மற்ற நாடுகள் இதை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரஷ்யா - சீனா உறவில் பிளவு?

ABOUT THE AUTHOR

...view details