தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைனில் ஒளிபரப்பாகும் ஆங்கில பாரம்பரிய பண்டிகை!

By

Published : Jun 20, 2020, 5:43 PM IST

சாலிஸ்பரி: கரோனா பாதிப்பு காரணமாக ஸ்டோன்ஹெஞ்சின்(Stonehenge ) கோடைகால சங்கிராந்தி கொண்டாட்டங்கள் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English Heritage in online streaming
English Heritage in online streaming

ஆங்கில பாரம்பரிய மிக்க பண்டிகையான கோடைகால சங்கிராந்தி ஒவ்வொரு ஆண்டும், கோடை தொடங்கும் நாளில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி இந்த பண்டிகை கொண்டாட படவுள்ளது.

சுமார் ஆயிரக்கணக்கான பேர் ஒன்று கூடி ஒரு இடத்தில் சூரிய உதயத்தை கண்டுகளிப்பார்கள். இந்த பண்டிகை 4 ஆயிரத்து 500 வருஷம் பழமையானது, மேலும் இது ஆங்கிலேயே பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகையாக கருதப்படுகிறது.

இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மக்கள் யாரும் ஒன்று கூடக்கூடாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த பண்டிகை இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ஒளிபரப்பாகவுள்ளது.

English Heritage in online streaming

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் சூரிய உதயத்தை இணையதளயத்தில் கண்டுகளிக்குமாறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா: உயிரை பணயம் வைத்து மனிதம் காக்கும் எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details