ETV Bharat / state

கரோனா: உயிரை பணயம் வைத்து மனிதம் காக்கும் எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்..!

author img

By

Published : Jun 20, 2020, 3:31 PM IST

சென்னை: கரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த தன்னார்வலர்கள் இறுதிச் சடங்கு செய்து வருவது மனிதநேயத்தை பறைசாற்றுகிறது.

எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்
எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்

சமீப காலங்களில் கரோனா தொற்றால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கரோனாவால் உயிர் இழந்தவர்களின் உடல்கள் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம்கூட உடல்கள் கொடுக்கப்படுவதில்லை. இதனால் உயிரிழந்தவருக்கு முறையான இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த பல குடும்பங்களின் துயரை துடைந்து வருகின்றனர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தன்னார்வலர்கள் குழு.

மதம், இனம் கடந்து கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்து இவர்கள் நல்லடக்கம் செய்வது, மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதைக் காட்டுகிறது. அந்த வகையில், கடந்த 15 நாள்களுக்கு முன்னர் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகி கரீம் உள்ளிட்டோர் தங்களுக்குள் எட்டு பேர்கள் கொண்ட குழுக்களை உருவாக்கி இந்தச் சேவையை தொடர்கின்றனர்.

சென்னை மட்டுமின்றி புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்துவருகின்றனர். இதற்காக உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் அனுமதி பெற்றுவிடுகின்றனர். குறிப்பாக, உயிரிழந்தவரின் மதத்திற்கு ஏற்றபடி இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் ஈடுபடும்போது உலக சுகாதார மையத்தின் பாதுகாப்பு நெரிமுறைகளான பி.பி.இ முழு கவச உடைகள், முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். இந்த உடைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு அழித்துவிடுகின்றனர்.

கரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் தன்னார்வலர்கள்

கரோனா அச்சத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் நிராதரவாக விட்டுச்செல்லப்படுகின்றன. இந்த அவலநிலை தொடரக்கூடாது என்பதற்காக எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள் அவர்களின் உயிரை பணயம் வைத்து இப்பணிகளில் ஈடுபடுகின்றனர். கடந்த ஜூன் 19ஆம் தேதி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முதியவர் கரோனாவால் உயிரிழந்தார். அவருடைய உடல் தண்டையார்பேட்டை சுடுகாட்டில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இது வரையிலும் கரோனாவால் உயிரிழந்த 34 பேரின் உடல்களை, இக்குழுவினர் அடக்கம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மன்னிச்சிருங்க ரஜினி சார்' - வெடிகுண்டு மிரட்டல்விடுத்த சிறுவனின் தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.