தமிழ்நாடு

tamil nadu

ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையில் பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம்!

By

Published : Aug 17, 2020, 3:34 PM IST

பிரஸ்ஸல்ஸ் : பிரட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான எதிர்கால உறவு குறித்து முடிவெடுக்கும் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

uk
uk

ஐரோப்பாவில் உள்ள பிரஸ்ஸல்ஸில் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான எதிர்கால உறவு குறித்து முடிவெடுக்கும் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெறு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 2016ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த நடத்தப்பட்ட பிரெக்சிட் வாக்கெடுப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 31, 2020இல் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து 47 ஆண்டு கால பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய உறவு முடிவுக்கு வந்தது. இருப்பினும் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரை, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நட்பு நாடுகளுடன் உள்ள பல ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details