தமிழ்நாடு

tamil nadu

பிரான்சில் அதிகரிக்கும் கோவிட் 2ஆம் அலை: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

By

Published : Apr 1, 2021, 5:09 PM IST

பிரான்ஸ் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

France
France

பிரான்ஸ் நாட்டில் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. இதையடுத்து அந்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் பள்ளிகள் மூன்று வாரத்திற்கு மூடப்படுகின்றன. இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அனைவரும் தங்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ தாண்டி பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் வாரங்களில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால், விரைவில் சிக்கலிலிருந்து மீண்டுவிடலாம் எனக் கூறியுள்ளார்.

பிரான்சில் ஏற்கனவே அக்டோபர், மார்ச் மாதங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 11 மாதங்களில் இல்லதாத அளவிற்கு தற்போது ஐசியுவில் சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது.

பிரான்சில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்து 44 ஆயிரத்து 423 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 95 ஆயிரத்து 640ஆக உள்ளது.

இதையும் படிங்க:தேர்தல் 2021: புதுச்சேரி வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஒரு அலசல்!

ABOUT THE AUTHOR

...view details