தமிழ்நாடு

tamil nadu

காரணமின்றி பிரிக்ஸிட் கால அவகாசத்தை நீட்டிக்கமுடியாது - ஐரோப்பிய ஒன்றியம்

By

Published : Mar 20, 2019, 9:55 AM IST

பிரஸ்ஸல்ஸ்: தெளிவான திட்டம் இல்லாமல் பிரிக்ஸிட் ஒப்பந்தத்துக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்துக்குள் பிரிட்டன் அதிபர் தெரெசா மேவால் எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியவில்லை.

மூன்று வாக்கெடுப்புகள் நடத்தியபோது மசோதா தோல்வியை சந்தித்தது. இதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெக்கரவ் மசோதாவில் எந்தவித மாற்றங்களும் செய்யாமல் மேற்கொண்டு வாக்கெடுப்பை நடத்த முடியாதென நேற்று அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேற இன்னும் 10 நாட்களே (மார்ச் 29) உள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதிகோரி தெரெசா மே பிரஸ்ஸல்ஸுக்கு கடிதம் எழுதவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பேச்சாளர் மைகேல் பெர்னியர், எந்த ஒரு உத்தரவாதமும் இன்றி கால அவகாசத்தை நீட்டிக்கமுடியாது என்றும், சரியான காரணமின்றி காத்திருப்பது அர்த்தமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் பிரிக்ஸிட் குழப்பம் தொடர்ந்துவருகிறது.

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details