தமிழ்நாடு

tamil nadu

கோவாக்ஸூக்கு சிறப்பு நிதியாக மேலும் ரூ.8,919 மில்லியன் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!

By

Published : Nov 13, 2020, 2:17 PM IST

பிரஸ்ஸல்ஸ்: கரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் கோவாக்ஸ் நிறுவனத்திற்கு, சிறப்பு நிதியாக 100 மில்லியன் யூரோவை (8,919 மில்லியன் ரூபாய்) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.

eu
eu

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், உலகளாவிய கரோனா பரிசோதனைக்கு சிறப்பு நிதியாக 100 மில்லியன் யூரோவை (8,919 மில்லியன் ரூபாய்) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, கரோனா தடுப்பூசி தயாரிக்கும் கோவாக்ஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 184 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. முன்னதாக, ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் 900 மில்லியன் யூரோ(79,371 மில்லியன் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் போட்டியில் ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

முன்னதாக, நேற்று(நவ.12) நடைபெற்ற மெய்நிகர் பாரிஸ் அமைதி மன்றத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், "பாதுகாப்பு மற்றும் பயனுள்ள தடுப்பூசி அனைவருக்கும் கிடைத்தால் மட்டுமே உலகளாவிய மீட்பு சாத்தியமாகும்" எனத் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details