தமிழ்நாடு

tamil nadu

பிரிக்ஸிட் விவகாரம் - கால அவகாசத்தை நீட்டித்த ஐரோப்பிய ஒன்றியம்!

By

Published : Mar 22, 2019, 9:16 AM IST

பிரஸல்ஸ்: 28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே


பிரிட்டனின் தனித்துவத்தை காக்க வேண்டும் என்ற பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அந்நாடு வெளியேற முடிவு எடுத்தது. இதனையடுத்து பிரதமராக 2016ஆம் ஆண்டு பதவியேற்ற தெரெசா மே, பொது வாக்கெடுப்பு நடத்தினர். இதில் ஆதரவு பெற்றதையடுத்து பிரிக்ஸிட் தொடர்பான ஒப்பந்தம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமரால் கொண்டு வரப்பட்ட பிரிக்ஸிட் ஒப்பந்தம் இரண்டு முறை தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, பிரிக்ஸிட் ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவராமல் மற்றொரு வாக்கெடுப்பு நடத்த முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மார்ச் 29ஆம் தேதி வரை பிரிட்டன் வெளியேறுவதற்கான் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தெரெசா மே கோரிக்கைவிடுத்திருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் சுமார் 6 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க், " ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற 27 உறுப்பு நாடுகளை பிரிட்டனின் கோரிக்கையை ஏற்றுள்ளது. இது குறித்து பிரதமர் தெரெசா மேவிடம் கூடுதல் ஆலோசனை நடத்த உள்ளேன் " என தெரிவித்தார்.

மே 22ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரிக்ஸிட் ஒப்பந்தம் மீது மூன்றாவது முறையாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வாக்கெடுப்பு நடத்த உள்ளது.

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details