தமிழ்நாடு

tamil nadu

பறக்கும் கார்களுக்கு சாலையில் செல்ல அனுமதி!

By

Published : Oct 28, 2020, 6:02 PM IST

Updated : Oct 28, 2020, 6:10 PM IST

ஆம்ஸ்டர்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளில் பறக்கும் கார் சாலையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Flying car
Flying car

டச்சு நிறுவனமான பால் - வி தயாரித்த ‘லிபர்டி’ என்ற பறக்கும் கார்களுக்கு சாலையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கிய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்குட்பட்ட நாடுகளில் இந்த கார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பால் - வி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராபர்ட் டிங்கிமான்ஸ் கூறுகையில், "பறக்கும் கார்களுக்கு சாலையில் ஓட்டுவதற்கு அனுமதி வாங்குவது மிக கடினமாக இருந்தது. அதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது. பிரேக் சரியாகப் பிடிக்கிறதா என்பது குறித்த சோதனை, காற்று மற்றும் ஒலி மாசு குறித்த சோதனை நடைபெற்றது.

சாலை, வானம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் வாகனத்திற்கான உள்கட்டமைப்பு இதுவரை தயார் செய்யப்படவில்லை. எனவே இவை இரண்டுக்கும் ஏற்றார்போல் விதிகளை விதித்து அனுமதி பெறுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றது.

இந்த பறக்கும் கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகம் வரை சாலையில் செல்லும், பறக்கும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஒரு டாங்க் எரிவாயு நிரப்பினால் 310 மைல் செல்லும்" என்றார்.

ஆரம்பகட்டமாக, 90 கார்கள் மட்டுமே விற்பனையில் விடப்படவுள்ளது. 2022ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் இந்த கார்கள் 5 லட்சம் யூரோக்களுக்கு விற்கப்படவுள்ளது.

Last Updated :Oct 28, 2020, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details