தமிழ்நாடு

tamil nadu

பிரெக்ஸிட் விவகாரம் - எட்டு விதமான நடைமுறையை நிராகரித்த நாடாளுமன்றம்!

By

Published : Mar 28, 2019, 9:25 AM IST

லண்டன்: பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட எட்டு விதமான நடைமுறைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தெரசா மே


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவெடுத்தையடுத்து 2016ஆம் ஆண்டு பிரதமர் தெரசா மே முயற்சியால் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவு கிடைக்க பெற்றதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட ஒப்பந்தம் தோல்வியை தழுவியது. இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை பிற உறுப்பு நாடுகள் அனுமதியுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட எட்டு விதமான நடைமுறைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. இது பின்னடைவாகவே கருதப்படுகிறது. அடுத்தகட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒரு சில எம்.பி.க்கள் கூறினாலும் அதற்கு மற்றொரு தரப்பு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரெக்ஸிட் விவகாரம் - எட்டு விதமான நடைமுறையை நிராகரித்த நாடாளுமன்றம்

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல 12 அல்லது மே 22 வரை நீட்டிக்க கோரிய மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 441 எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாகப் பேசிய தெரசா மே, தான் கொண்டுவரும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details