தமிழ்நாடு

tamil nadu

பெண்களுக்கு விளையாட அனுமதியில்லை - தாலிபான் உத்தரவு

By

Published : Sep 8, 2021, 8:48 PM IST

women in Afghanistan
women in Afghanistan

ஆப்கானிஸ்தானில், கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளும் விளையாட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தாலிபான் ஆட்சி இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படியே நடைபெறும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அரசின் புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

பெண்கள் விளையாட அனுமதியில்லை

இது தொடர்பாக தாலிபான் கலாசார அமைப்பின் துணை தலைவர் அகமதுல்லா வாசிக் கூறியதாவது, பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

விளையாடினால் உடல் முழுவதும் மறைக்கும்படி அடை அணிந்துகொள்வது வாய்ப்பில்லை. இஸ்லாமில் அதற்கு அனுமதியில்லை. எனவே, இஸ்லாமிய அரசில் பெண்கள் விளையாட அனுமதியில்லை என்றார்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது. தாலிபானின் இந்த அறிவிப்பால் சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க:தாலிபான்களின் அமைச்சரவை: சிறுபான்மையினர், பெண்கள் கிடையாது

ABOUT THE AUTHOR

...view details