தமிழ்நாடு

tamil nadu

எங்கள் பகுதியில் ட்ரோன் பயன்படுத்த கூடாது - அமெரிக்காவுக்கு தாலிபான் எச்சரிக்கை

By

Published : Sep 29, 2021, 11:02 AM IST

ஆப்கானிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ட்ரோன் பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Taliban
Taliban

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அமெரிக்க மற்றும் அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் எச்சரிக்கை தரும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 'தாலிபான் அரசு அனைத்து நாடுகளுக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் வான்வெளிப் பகுதியில் யாரும் ட்ரோன் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக அமெரிக்கா இதை பின்பற்ற வேண்டும்.

இது ஆப்கன் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம். இதை மீறினால் மோசமான விளைவுகள் சந்திக்க நேரிடும்' என எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 21 ஆண்டுகள் போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அமெரிக்கா தனது ராணுவத்தை ஆப்கானிலிருந்து ஆகஸ்ட் மாதம் விலக்கியது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் அஸ்ரஃப் கனியின் ஆட்சி கவிழ்ந்து தாலிபான் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாற்றம் அங்கு ஜனநாயக ஆட்சிமுறையை காலிசெய்து, மதவாத சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டுவந்துள்ளது.

இதையும் படிங்க:சொத்தும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் காதல் ஒன்றே போதும் - இளவரசியின் இதயக்கதை

ABOUT THE AUTHOR

...view details