தமிழ்நாடு

tamil nadu

விண்வெளியில் அத்துமீறல்: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு!

By

Published : Jul 25, 2020, 12:10 PM IST

மாஸ்கோ: விண்வெளியில் அத்துமீறி வருவதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Russia
Russia

விண்வெளியிலுள்ள செயற்கைக்கோள்களைத் தாக்கும் விதமான ஆயுதங்களை ரஷ்யா பரிசோதனை செய்ததாக அமெரிக்கா அன்மையில் குற்றஞ்சாட்டியது. அமெரிக்க அரசின் செயற்கைக்கோளுக்கு அருகே, செயற்கைக்கோளை அழிக்கும் தன்மை கொண்ட ஆயுதங்களை ரஷ்யா பரிசோதனை செய்ததாகவும், இதுபோன்ற பரிசோதனை ஆபத்தானது எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

அமெரிக்காவின் இதே குற்றச்சாட்டை பிரிட்டனின் விண்வெளி இயக்குநரக தலைவர், ஜூலை 15ஆம் தேதி தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைத்துப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது எனவும், ரஷ்யாவை மட்டம் தட்டி ஒடுக்கும் செயலாகவே இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுகின்றன என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமைதியையே எப்போதும் விரும்பும் ரஷ்யா விண்வெளியில் எந்தவித ராணுவ நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிங்க:பழிக்குப் பழி : சீனாவில் அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details