ETV Bharat / international

பழிக்குப் பழி : சீனாவில் அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவு

author img

By

Published : Jul 24, 2020, 3:07 PM IST

பெய்ஜிங்: அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் விதமாக சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.

China
China

சீனா - அமெரிக்கா இடையே நீண்ட நாள்களாக பனிப்போர் நிலவிவரும் நிலையில், கரோனா பாரவலுக்குப் பின் இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துவருகிறது. இதன் முக்கிய நகர்வாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சீனா தூதரகத்தை மூடக்கோரி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி சீனா வலியுறுத்திய சூழலில், இதற்கு அமெரிக்க அசைந்துகொடுக்கவில்லை. இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் விதமாக சீனா தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள செங்க்டு பகுதியில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தை உடனே மூடக்கோரி சீனா உத்தரவிட்டுள்ளது. இந்த பதிலடி நடவடிக்கை மூலம் அமெரிக்காவை சீனா சீண்டியுள்ளது. ஹாங்காங், உய்கர் இஸ்லாமியர்கள், இணைய தாக்குதல், உளவு வேலை, கரோனா என பல விவகாரங்களில் அமெரிக்கா சீனாவை தாக்கிவருகிறது. வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா மையப்புள்ளியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விண்வெளியில் அத்துமீறும் ரஷ்யா - அமெரிக்கா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.