தமிழ்நாடு

tamil nadu

’அவமதித்த அமெரிக்காவுடன் இனி கூட்டணி இல்லை’ - பாகிஸ்தான் பிரதமர்

By

Published : Jul 1, 2021, 1:17 PM IST

போர் சூழலில் இனி ஒருபோதும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கூட்டணி வைக்காது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Imran Khan
Imran Khan

பாகிஸ்தான் - அமெரிக்கா உறவு குறித்து முக்கிய நிலைபாட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இனி கூட்டணி கிடையாது

முன்னதாக இது குறித்து பேசிய இம்ரான் கான், "பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டு வைத்தபோது ஒரு பாகிஸ்தானியாக மிகவும் அவமானம் அடைந்தேன். அமைதியில் அமெரிக்காவுடன் கூட்டு வைக்கலாம். மாறாக போரில் அவர்களுடன் கூட்டு கிடையாது.

நமது சேவைகளையும், தியாகங்களையும் அமெரிக்கா மதித்ததே இல்லை. ஆனால், பாகிஸ்தான் மீது மட்டுமே குற்றசாட்டை திணிப்பார்கள். ஆப்கான் விவகாரத்தை பார்க்கும்போது பாகிஸ்தானுக்கு மோசமான நாள்கள் எதிரில் உள்ளதாகத் தெரிகிறது. நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனி ஒருபோதும் போர் சூழலில் அமெரிக்காவுடன் கூட்டு வைக்க மாட்டோம்" என்றார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:உலகின் 2ஆவது பெரிய நீர் மின் திட்டத்தை தொடங்கிய சீனா

ABOUT THE AUTHOR

...view details