தமிழ்நாடு

tamil nadu

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் வடகொரியா ஏவுகணை சோதனை? - மீண்டும் பரபரப்பு

By

Published : Oct 2, 2019, 8:03 PM IST

சியோல்: நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து கிழக்கு கடலில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

north korea

இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புப் படை வெளியிட்டிருந்த அறிக்கையில், நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து கிழக்குக் கடலை நோக்கி இன்று காலை ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனையிட்டது. 'புக்குக்சோங்' ரகத்தைச் சேர்ந்த இந்த ஏவுகணை சுமார் 450 கி.மீ., தூரம் பயணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த ஏவுகணை ஜப்பானின் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் விழுந்ததாக, அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

இதனை விமர்சித்துப் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, "இந்த ஏவுகணை சோதனை ஐநா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்துக்கு எதிரானது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.

அமெரிக்கா-வடகொரியா இடையே பல மாதங்களாக முடங்கிக்கிடந்த அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தை வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இருந்த நிலையில், இந்த சோதனையானது அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க:

ரஷ்யாவில் காந்தி புகைப்பட கண்காட்சி!

North Korea fires possible submarine-launched ballistic missile


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details