தமிழ்நாடு

tamil nadu

'இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை' - இம்ரான் கான்

By

Published : Jan 11, 2021, 1:29 PM IST

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை மீண்டும் வழங்கும் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்:ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிவந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்தது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை மீண்டும் வழங்கும்வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இருநாடுகளிடையே பதற்றம் நிலவிவருகிறது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதியை ரத்துசெய்து, அதனை இரு மாநிலங்களாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து, இது உள்நாட்டு விவகாரம் என இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:'ஸ்டார்ட்-அப் இந்தியா சர்வதேச மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்' - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details