தமிழ்நாடு

tamil nadu

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் சேவை தொடக்கம்

By

Published : Sep 9, 2021, 8:32 PM IST

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்த பின் முதன்முறையாக மீண்டும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

Afghanistan
Afghanistan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 150 பயணிகளுடன் கூடிய விமானம் கத்தார் செல்லவுள்ளது. இதில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் செல்லவுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ராணுவ விலகல் நடவடிக்கை மேற்கொண்ட பின், முதன்முறையாக அங்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து, தாலிபான் ஆட்சியை kகைப்பற்றியது. அதிபராக இருந்து அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் முழுவதும் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. சர்வதேச நாடுகள் தங்கள் ராணுவத்தை வைத்து குடிமக்களை மீட்கும் பணியை மேற்கொண்டன.

இந்நிலையில், தாலிபான் தலைமையில் புதிய அரசு ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ளது. மெல்ல அங்கு இயல்பு நிலை திரும்ப சர்வதேச நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

அதன் முதல் நடவடிக்கையாகவே இந்த விமானப் போக்குவரத்து சேவை தொடக்கம் தெரிகிறது.

இதையும் படிங்க:தாலிபன்களால் முடிவுக்கு வருகிறதா ஆப்கன் கிரிக்கெட்?

ABOUT THE AUTHOR

...view details