தமிழ்நாடு

tamil nadu

129 இந்தியர்களுடன் காபூலில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம்

By

Published : Aug 15, 2021, 8:02 PM IST

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க அனுப்பப்பட்ட ஏர் இந்தியா விமானம், இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 129 பேருடன் பாதுகாப்பாக காபூலில் இருந்து கிளம்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Delhi-bound Air India flight takes off from Kabul with 129 passengers
129 இந்தியர்களுடன் காபூலில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம்

காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த தலிபான்கள், இன்று காலை அந்நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டனர்.

இருப்பினும், காபூலை தாங்கள் தாக்கப்போவதில்லை என்றும்; அமைதியான அதிகார மாற்றத்திற்கு காத்திருப்பதாகவும் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் அறிவித்தார்.

இந்தியர்களைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர, ஏர் இந்தியா விமானத்தை ஒன்றிய அரசு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அனுப்பியது.

அந்த விமானம், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முக்கிய அலுவலர்கள் உள்பட 129 பேருடன் பாதுகாப்பாக காபூலில் இருந்து கிளம்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:அமைதியான அதிகார மாற்றத்திற்காக காத்திருக்கிறோம் - தலிபான் செய்தித்தொடர்பாளர்

ABOUT THE AUTHOR

...view details