தமிழ்நாடு

tamil nadu

கஜினி பிராந்தியத்தை கைப்பற்றிய தலிபான்

By

Published : Aug 12, 2021, 6:50 PM IST

ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி பிராந்தியத்தை கைப்பற்றிய தலிபான்கள் தலைநகர் காபூலை நோக்கி முன்னேறுகின்றனர்.

தலிபான்
தலிபான்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்கிவருகிறது. 20 ஆண்டுகாலப் போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அமெரிக்கா தனது படையை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் வேலையில் தலிபான்கள் களமிறங்கியுள்ளனர். ஊரகப் பகுதிகளை பெரும்பாலும் தனது கட்டுக்குள் கொண்டுவந்துள்ள தலிபான், நாட்டின் முக்கிய பிராந்தியங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறது.

இதுவரை ஒன்பது பிராந்தியங்களை கைப்பற்றியிருந்த தலிபான் இன்று பத்தாவதாக கஜினி என்ற பிராந்தியத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ஆப்கானின் 65 விழுக்காடு பகுதியை தலிபான் தனது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை குறிவைத்து தலிபான்கள் முன்னேறிவருவதாகக் கூறப்படுகிறது. தலிபான்களின் இந்த செயல்பாட்டிற்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவிவருவதாக ஆப்கான் அரசு குற்றஞ்சாட்டிவருகிறது.

தலிபானின் ஊதுகுழலாக இம்ரான் கான் தலைமையிலான அரசு செயல்படுவதாக ஆப்கானிஸ்தான் கடுமையாக சாடியுள்ளது.

இதையும் படிங்க:டெல்டாவிற்கு எதிராக 83% பங்காற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசி!

ABOUT THE AUTHOR

...view details