தமிழ்நாடு

tamil nadu

'நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு, ட்ரம்புக்கு ஆதரவு'- இது காலிஸ்தான் அரசியல்

By

Published : Feb 20, 2020, 6:11 PM IST

வாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணத்துக்கு மூன்று நாள்களே இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகை அலுவலர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களை இன்று சந்தித்துப் பேசினர். நரேந்திர மோடிக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Sikhs For Justice news  pro-Khalistani group  White House officials  Washington news  US-INDIA Ties  Indo-US relations  Unlawful Activities (Prevention) Act, 1967  'நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு, ட்ரம்புக்கு ஆதரவு'- இது காலிஸ்தான் அரசியல்  காலிஸ்தான் அரசியல்  சீக்கிய நீதி அமைப்பு, அமெரிக்கா, ட்ரம்ப், வெள்ளை மாளிகை
White House officials meet members of pro-Khalistani group

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24ஆம் தேதி முதல்முறையாக இந்தியா வருகிறார். அவரின் வருகைக்கு இன்னமும் மூன்று நாள்களே இருக்கும் நிலையில், இன்று சீக்கிய நீதி அமைப்பினர் (காலிஸ்தான் நாடு ஆதரவாளர்கள்) வெள்ளை மாளிகை அலுவலர்களைச் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து இந்தியா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும் இந்தியாவுக்கு எதிரான அமைப்பினரை அமெரிக்கா சந்தித்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது அவருக்கு எதிராக இதே சீக்கிய நீதி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

காலிஸ்தான் ஆதரவாளர்களான சீக்கிய நீதி அமைப்பினர், அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளனர்.

இதையும் படிங்க:சைவ மடத்திற்கு தலைமையேற்கும் இஸ்லாமியர் - அசத்தும் கர்நாடகா

ABOUT THE AUTHOR

...view details