தமிழ்நாடு

tamil nadu

மத்திய கிழக்கு நாடுகளில் படைகளை விலக்கும் அமெரிக்கா... ஈரானுக்கு சாதகமா?

By

Published : Dec 8, 2020, 4:16 PM IST

ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்கா படைகளை விலக்க அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

US troop
US troop

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியிலிருந்து கிளம்பும் சூழலிலும் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்த வண்ணம் உள்ளார். குறிப்பாக, அமெரிக்க படையினர் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு சார்ந்து முக்கிய விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது.

2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ட்ரம்ப், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்க படையினரை மீண்டும் நாடு கொண்டுவருதாக தெரிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் விதமாக 'தலிபான் அமைதி ஒப்பந்தத்தை' மேற்கொண்டார். இதையடுத்து, ஆப்கானில் உள்ள சுமார் 2,000 அமெரிக்க படையினர் அமெரிக்கா திரும்பவுள்ளனர்.

அத்துடன் நிற்காமல், சோமாலியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் படையினரை திரும்ப பெறும் உத்தரவை ட்ரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். அண்மையில் முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த சூழலில், தான் பதவியிலிருந்து கிளம்பும் நேரத்தில் ராணுவ விவகாரத்தை வைத்து குட்டி களேபரத்தை ட்ரம்ப் மேற்கொண்டுவருவது சர்வதேச அரங்கில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

குறிப்பாக, அமெரிக்காவின் படை குறைப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் பிடியை மீண்டு வலுப்படுத்தும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: நிலநடுக்கத்தால் வளர்ந்த எவரெஸ்ட் சிகரம் - புதிய உயரம் என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details