தமிழ்நாடு

tamil nadu

ஆந்திர சிறுமிக்கு ட்ரம்ப் புகழாரம்!

By

Published : May 20, 2020, 8:49 PM IST

வாஷிங்டன் : கோவிட்-19 காலத்தில் சமூகப் பணி மேற்கொண்ட இந்திய வம்சாவளி சிறுமி ஒருவருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

trump shravya
trump shravya

அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணத்தில் உள்ள ஹனோவர் ஹில்ஸ் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் மாணவி, ஷரவ்யா.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் பல்வேறு அரசுத்துறையினருக்கு இலவசமாக பிஸ்கேட் வழங்கி வருகிறார். இதையடுத்து ஷரவ்யாவின் சமூகப் பணியைப் பாராட்டி, வெள்ளை மாளிகையில் விருது வழங்கி, அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம், குண்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னபூர்னா சீதாகலம், விஜயராயரெட்டி தம்பதிகளின் மகளே, ஷரவ்யா. இவர்கள் குடும்பத்துடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். ஷரவ்யாவின் பெற்றோர்கள் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது விமான சேவை

ABOUT THE AUTHOR

...view details