தமிழ்நாடு

tamil nadu

கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க உதவும் டெஸ்லா!

By

Published : Jul 3, 2020, 5:32 PM IST

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்று எதிராக messenger RNA என்ற முறையைப் பயன்படுத்தி தடுப்பு மருந்தை உருவாக்க க்யூர்வாக் என்ற நிறுவனத்துடன் டெஸ்லா கைகோர்த்துள்ளது.

Tesla
Tesla

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்றவை. இருப்பினும், அதைத்தாண்டி பல்வேறு துறைகளிலுள்ள சிறந்த நிறுவனங்களிலும் டெஸ்லா தனது முதலீடுகளை செய்துள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 தொற்றுக்கான மருந்தை தயாரிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் முயன்றுவருகின்றனர். அதன்படி, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த க்யூர்வாக் என்ற நிறுவனம் messenger RNA என்ற முறையைப் பயன்படுத்தி கரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

க்யூர்வாக் ஒரு RNA பிரிண்டரை உருவாக்க முயற்சித்துவருகிறது. இது நமது செல்களை கரோனா ஆன்ட்டிபாடிகளை உருவாக்க துண்டுகிறது. இந்நிலையில், கரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் க்யூர்வாக் நிறுவத்திற்காக RNA பிரிண்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது.

இது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "செயற்கை RNA (மற்றும் DNA) அற்புதமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். அடிப்படையில் பல நோய்களுக்கான தீர்வை இது ஒரு சாப்ட்வேர் பிரச்னையாக மாற்றுகிறது.

டெஸ்லா, ஒரு திட்டமாக, க்யூர்வாக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு RNA மைக்ரோ ஃபேக்டரிகளை உருவாக்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

‘CVnCoV’ என பெயரிட்டுள்ள இந்தத் தடுப்பூசிகளின் முதலாம் கட்ட மனித பரிசோதனைகளுக்கு ஜெர்மனி, பெல்ஜியம் அரசுகள் கடந்த மாதம் அனுமதி அளித்தன. அதேபோல மாடர்னா, ஃபைசர், பயோஎன்டெக் உள்ளிட்ட நிறுவனங்களும் RNA முறையில் கரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெகிழ்ச்சியான முறையில் பிரேசில் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details