தமிழ்நாடு

tamil nadu

அதிபர் ஜோ பைடனுக்கு பரிசாக ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டி

By

Published : Dec 21, 2021, 5:46 PM IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிறந்த நாள் பரிசாக ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு கமாண்டர் என பெயரிட்டுள்ளது.

President Joe Biden
President Joe Biden

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நாய்க்குட்டிகள் மிகவும் விருப்பமான செல்ல பிராணி. இவர் வளர்த்த நாய்க்குட்டி சாம்ப் கடந்த ஜூன் மாதம் இறந்தது. இந்த நிலையில், அவரது சகோதரர் ஜேம்ஸ் பைடன், மூன்று மாத வயதுடைய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டியை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார்.

இதற்கு கமாண்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளை மாளிகைக்கு உன்னை வரவேற்கிறேன் கமாண்டர் எனப் பதிவிட்டு, நாயுடன் இருக்கும் சுருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பைடனின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் லாரோசா கூறுகையில், "கமாண்டர் நாய்க்குட்டியை வெள்ளை மாளிகைக்கு கொண்டுவருவதற்கு முன்னதாக, நாய் பயிற்சியாளர்கள், விலங்கு நடத்தை நிபுணர்கள், கால்நடை மருத்துவர்களுடன் நன்கு கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்ட பின்னரே இங்கு கொண்டுவரப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Kamala Harris: வைட் ஹவுஸின் முதல் பெண் அதிபர்!

ABOUT THE AUTHOR

...view details