ETV Bharat / international

Kamala Harris: வைட் ஹவுஸின் முதல் பெண் அதிபர்!

author img

By

Published : Nov 20, 2021, 11:15 AM IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரின் பொறுப்புகளை துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) தற்காலிக கவனித்துக்கொண்டார்.

Kamala Harris, கமலா ஹாரிஸ்
Kamala Harris

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடல் பாதிப்புகளைக் கண்டறியும், வழக்கமான பரிசோதனையை (Routine Colonoscopy) நேற்று (நவம்பர் 19) மேற்கொண்டார். இதனால், அவரின் பொறுப்புகளை துணை அதிபர் கமலா ஹாரிஸ் கவனித்துக்கொண்டார்.

இது குறித்து ஊடகச் செயலாளர் கூறுகையில், "பைடனின் பரிசோதனை நேற்று காலை 10.10 மணிக்குத் தொடங்கப்பட்டது. பரிசோதனையின்போது அவருக்கு மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டது.

இதனால், தற்காலிகமாக அவரின் பொறுப்புகளை கமலா ஹாரிஸ் நிர்வகித்தார். பரிசோதனைக்குப் பின்னர் பைடன், 11.35 மணிக்கு மீண்டும் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்" என்றார்.

ஏறத்தாழ, ஒரு மணிநேரம் 25 நிமிடத்திற்கு அதிபரின் பொறுப்புகளை கவனித்துக்கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் பெண் அதிபராவார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொண்ட சீனா - அதிர்ச்சியில் அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.