தமிழ்நாடு

tamil nadu

ஒபாமாவுக்கு கரோனா பாதிப்பு

By

Published : Mar 14, 2022, 7:05 AM IST

Updated : Mar 14, 2022, 7:17 AM IST

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Barack Obama
Barack Obama

அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், தனக்கு கடந்த சில நாள்களாவே கோவிட் அறிகுறிகள் இருந்ததாகவும், பரிசோதனையில் கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தனது மனைவி மிச்சல் ஒபாமாவுக்கு கோவிட் பாதிப்பு இல்லை எனவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதையடுத்து அந்நாட்டில் கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 8.11 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி பாதிப்புகள் 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகிறது.

இதையும் படிங்க:அமெரிக்க ஊடகவியலாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை!

Last Updated : Mar 14, 2022, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details