தமிழ்நாடு

tamil nadu

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்

By

Published : Jan 6, 2021, 3:00 PM IST

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில், அந்நாட்டு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கலந்துகொள்ளவுள்ளார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவருடன் கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்களது பதவியேற்பு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அந்நாட்டு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (74) மற்றும் அவரது மனைவி லாரா புஷ் பங்கேற்கவுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் ஃப்ரெட்டி போர்ட் தெரிவித்துள்ளார். இது ஜார்ஜ் புஷ் கலந்துகொள்ளும் 8வது பதவியேற்பு நிகழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். தேர்தல் முறைகேடு தொடர்பாக அவர் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியானது.

இதையும் படிங்க:இந்தியா, இஸ்ரேல் கூட்டு முயற்சி - நடுத்தர ரக ஏவுகணை சோதனை வெற்றி

ABOUT THE AUTHOR

...view details