தமிழ்நாடு

tamil nadu

வரும் ஆகஸ்ட் 3-ல் மதுரையில் நடைபெறவிருக்கும் 'விருமன்' ஆடியோ வெளியீட்டு விழா!

By

Published : Aug 1, 2022, 7:19 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3அன்று மதுரையில் நடைபெறவுள்ளது.

ஆக.3 நடைபெறவிருக்கும் ’விருமன்’ ஆடியோ வெளியீட்டு விழா..!
ஆக.3 நடைபெறவிருக்கும் ’விருமன்’ ஆடியோ வெளியீட்டு விழா..!

சென்னை:2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3ஆம் தேதி நடக்கிறது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.

இதையும் படிங்க: 'வாங்கோ வாங்கோ ஒன்னாகி...!' - அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்!

ABOUT THE AUTHOR

...view details