தமிழ்நாடு

tamil nadu

வருகிறது வாரிசு படத்தின் முதல் பாடல் ; படக்குழு வெளியிட்ட அப்டேட்

By

Published : Nov 3, 2022, 11:20 AM IST

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இன்று மாலை வெளியாகிறது.

வருகிறது வாரிசு படத்தின் முதல் பாடல் படக்குழு வெளியிட்ட அப்டேட்
வருகிறது வாரிசு படத்தின் முதல் பாடல் படக்குழு வெளியிட்ட அப்டேட்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ’வாரிசு’ திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகவுள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தீபாவளி அன்றே படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பாடலின் ப்ரோமோ வெளியாகவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடலை விஜய் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த யுவராஜ் சிங்கின் தந்தை

ABOUT THE AUTHOR

...view details