தமிழ்நாடு

tamil nadu

’ரியல் லெஜெண்ட் எண்ட்ரீ’ : பிரம்மாண்டமாக நடைபெறும் லெஜண்ட் இசை வெளியீட்டு விழா!

By

Published : May 18, 2022, 7:02 PM IST

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் ’தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

’ரியல் லெஜெண்ட் எண்ட்ரீ..!’ : பிரம்மாண்டமாக நடைபெறும் லெஜண்ட் இசை வெளியீட்டு விழா
’ரியல் லெஜெண்ட் எண்ட்ரீ..!’ : பிரம்மாண்டமாக நடைபெறும் லெஜண்ட் இசை வெளியீட்டு விழா

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சரவணன் அருளுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் ஒரு பாடல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 29ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

மேலும் இந்த விழாவில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அதுமட்டுமில்லாமல் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Perarivalan Release: பேரறிவாளனின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகர் சத்யராஜ்!

ABOUT THE AUTHOR

...view details