தமிழ்நாடு

tamil nadu

'என்னை சங்குல எறக்குறேன்ன..?' : வெறித்தனமான 'சாணிக் காயிதம்' ட்ரெய்லர்!

By

Published : Apr 26, 2022, 4:13 PM IST

Updated : Apr 26, 2022, 9:10 PM IST

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் சாணிக் காயிதம் ட்ரெய்லர் இன்று(ஏப்.26) வெளியானது.

’என்ன.., சங்குல எறக்குறேன்ன..? ‘ : வெறித்தனமான ’சாணிக் காயிதம்’ டிரைலர்
’என்ன.., சங்குல எறக்குறேன்ன..? ‘ : வெறித்தனமான ’சாணிக் காயிதம்’ டிரைலர்

இந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ’ராக்கி’. தொழில்நுட்பம், திரைக்கதை, திரை மொழி என அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த திரைப்படமாக ’ராக்கி’ திகழ்ந்தது. இதனையடுத்து ’ராக்கி’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே அருண் மாதேஸ்வரன், செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இணையும் ’சாணிக்காயிதம்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.

இதனையடுத்து ’சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசரில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்கள், கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான பாத்திரப்படைப்பு, என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்நிலையில், இன்று(ஏப்.26) அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 3 நிமிடத்திற்கு மேலுள்ள இந்த ட்ரெய்லரில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் அலாதியான நடிப்பு, காட்சியமைப்பு, என அனைத்தும் ’ராக்கி’ திரைப்படத்தைப் போலவே மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தமிழ் சினிமாவில் மற்றுமொரு ரத்தம் தெறிக்கும், வன்முறை நிறைந்த ரிவெஞ்ச் டிராமாவைக் காண அனைவரும் தயாராக இருக்கலாம், என அருண் மாதேஸ்வரன் இந்த ட்ரெய்லர் மூலம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம் - மன்னிப்பு கேட்ட படக்குழு!

Last Updated : Apr 26, 2022, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details