தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் விருந்து - வேட்டையன் போஸ்டர் வெளியிட்ட படக்குழு! தலைவர்-170 அதிரடி அப்டேட்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 5:33 PM IST

Rajinikanth 170th Poster Release: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தினை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ ஏற்கனவே வெளியாகி ரஜினி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது பொங்கல் விருந்தாக வேட்டையன் படத்தின் புதிய போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது.

rajini-kanth-170-movie-vettaiyan-poster-release
பொங்கலுக்கு மாஸ் காட்டிய வேட்டையன்; ரஜினி '170 படத்தின்' போஸ்டர் வெளியீடு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தலைவர் 170' புதிய திரைப்படத்தினை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு,'தலைவர் 170' படத்திற்கு 'வேட்டையன்' எனத் தலைப்பை அறிமுகப்படுத்தும் வீடியோ ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலாகவும், மாஸாகவும் உள்ளார் என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோவில் குறி வெச்சா இரை விழனும் என்று ரஜினிகாந்த் சொல்லும் வசனம் வைரலாகியது.

முன்னதாக, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முந்தைய சில படங்கள் ரஜினிகாந்த்திற்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தந்தது. ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த், ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

இதனையடுத்து "வேட்டையன்" படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது.

தற்போது வேட்டையன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த போஸ்டர் வழக்கத்துக்கு மாறாக ஓவியம் வரைவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை ராஜ்குமார் ஸ்தபதி வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பொங்கலுக்கு அனல் பறக்க வெளியானது- நடிகர் விஜயின் The GOAT போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details