ETV Bharat / entertainment

பொங்கலுக்கு அனல் பறக்க வெளியானது- நடிகர் விஜயின் The GOAT போஸ்டர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:32 PM IST

Updated : Jan 15, 2024, 5:56 PM IST

Thalapathy 68 “The Goat" Update: தளபதி 68 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்தின் 2வது லுக் போஸ்டர் படக்குழுவால் 2024 ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது பொங்கல் விருந்தாகப் படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டு உள்ளது.
thalapathy-68-movie-the-goat-3-look-poster-release
பொங்கலுக்கு அனல் பறக்க வெளியானது The GOAT அப்டேட்..!

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார், ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் 'தளபதி 68' படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2023 டிசம்பர் 31ஆம் தேதி தளபதி 68 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது. The Greatest of All Time எனவும், (light can devaour the darkness but darkness cannot consume the light) ஒளி இருளை விழுங்கலாம். ஆனால், இருளால் ஒளியை உட்கொள்ள முடியாது என எழுதப்பட்டுள்ள போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே இந்த போஸ்டரிலும் இரட்டை வேடத்தில் உள்ள காட்சியளிக்கும் படம் இடம் பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து வைக்கும் விதமாக படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு இன்று (ஜனவரி 15) வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் விஜய் உடன் பிரபுதேவா பிரசாந்த அஜ்மல் ஆகியோர் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

படத்தில் முதல் போஸ்டர் விஜய் இரட்டை வேடங்களில் விமானி உடையில் இருக்கும் படம் வெளியானது. தற்போது கவச உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர் வெளியானதால் படம் ராணுவம் சார்ந்தாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடிய சினிமா பிரபலங்கள்… ரசிகர்களுக்கு வாழ்த்து!

Last Updated :Jan 15, 2024, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.