தமிழ்நாடு

tamil nadu

சலார் படத்தில் பிரித்விராஜின் மாஸ் லுக் வெளியீடு

By

Published : Oct 16, 2022, 12:53 PM IST

Updated : Oct 16, 2022, 1:07 PM IST

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் பிரித்விராஜ் லுக்கை அப்படக்குழு வெளியிட்டுள்ளது.

சலார் படத்தில் பிரித்விராஜின் மாஸ் லுக் வெளியீடு
சலார் படத்தில் பிரித்விராஜின் மாஸ் லுக் வெளியீடு

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், பிரித்விராஜ் நடித்து வரும் ’சலார்’ படத்தில் பிரித்வி ராஜ் கதாபாத்திரத்தின் லுக்கை அவரது பிறந்த நாளான இன்று(அக்.16) நடிகர் பிரபாஸ் வெளியிட்டார். கேஜிஎஃப் 1, 2-இன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் மீண்டும் ஒரு மாபெரும் பொருட் செலவில் பான் இந்தியத் திரைப்படமாக இயக்கி வரும் திரைப்படம் தான் ’சலார்’.

அந்தப் படத்தில் ‘வரதராஜ மன்னார்’ எனும் கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கும் பிரித்விராஜின் லுக்கை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் நடிகர் பிரபாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த சலார் திரைப்படம் இந்தியா மற்றும் ஐரோப்ப நாடுகளில் படமாக்கப்பட்டது. இந்தப் படம் ஐந்து மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் நடித்த பிரித்விராஜ் குறித்து இந்தப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் கூறுகையில், “பிரித்விராஜ் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் எங்கள் படத்தில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. இவரை விட அந்த ‘வரதராஜ மன்னார்’ கதாபாத்திரத்தை வேறு எவரும் இவ்வளவு கச்சிதமாக செய்திருக்க முடியாது” என்றார்.

இந்தப் படத்தில் இவர்களுடன் சேர்த்து சுருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி. ஆகிய நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் உலகெங்கும் அடுத்த ஆண்டு செப்.28 முதல் வெளியாகும் என அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நயன்- விக்கி மீது போலீசில் புகார்..! தவறான முன்னுதாரணம் என குற்றச்சாட்டு...

Last Updated : Oct 16, 2022, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details