தமிழ்நாடு

tamil nadu

Adipurush: எல்லா தியேட்டர்லயும் அனுமனுக்கு ஒரு சீட்.. ஆதிபுருஷ் படக்குழு அதிரடி அறிவிப்பு!

By

Published : Jun 6, 2023, 10:32 AM IST

ஆதிபுருஷ்(Adipurush) திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்காக ஒரு இருக்கையை ஒதுக்குமாறு படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்குங்க.. ஆதிபுருஷ் குழுவினரின் அதிரடி அறிவிப்பு
அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்குங்க.. ஆதிபுருஷ் குழுவினரின் அதிரடி அறிவிப்பு

ஹைதராபாத்: இயக்குநர் ஓம் ராவத் இயக்கி உள்ள திரைப்படம், ஆதிபுருஷ். இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சாயிப் அலி கான், சன்னி சிங் மற்றும் தேவ்தத்தா நாகே ஆகியோர் முக்கியமான முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 500 கோடி ரூபாய் என்ற பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்தப் படம், வருகிற 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், “எங்கு எல்லாம் ராமாயணம் ஓதப்படுகிறதோ, அங்கு அனுமன் வருகை தருவார். இது எங்களது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு மரியாதை அளிக்கும் வகையில், ராமனாக பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு இருக்கையை விற்பனை செய்யமால், அனுமனுக்கு ஒதுக்க வேண்டும்.

வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில், தலை சிறந்த ராம பக்தருக்கு (அனுமன்) மரியாதை செலுத்த வேண்டும். வழி தெரியாத நிலையில், இந்த சிறந்த பணியை நாங்கள் தொடங்கி உள்ளோம். கடவுள் அனுமன் முன்னிலையில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆதிபுருஷை நாம் காண வேண்டும்” என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் ராமாயண நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

எனவே, அந்த நம்பிக்கைக்கு மரியாதை அளிக்கும் வகையில், அனுமனுக்கு ஆதிபுருஷ் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளிலும் ஒரு இருக்கையை ஒதுக்குமாறு படக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

3டி மற்றும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியான 16 மணி நேரத்திலேயே, வெளியான 5 மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு மிக்க திரைப்படமாக ஆதிபுருஷ் உருவெடுத்துள்ளதாக படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில், இதே மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியான கோச்சடையான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதேநேரம், தமிழ் சினிமாவில் சம்பூர்ண ராமாயணம் என்ற திரைப்படத்தில் தொடங்கி தொலைக்காட்சித் தொடர், ராம ராஜ்ஜியம் வரை பல வடிவங்களில் உருவெடுத்த ராமாயணம், தற்போது மோஷன் கேப்சர் வடிவில் வெளியாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கான கதைகளில் 2டி மற்றும் 3டி அனிமேஷனில் ராமாயணம் ஏற்கனவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புகைப்படத்தில் புகையவிடும் ராகுல் ப்ரீத் சிங் : கிறங்கடிக்கும் வைரல் பிக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details