புகைப்படத்தில் புகையவிடும் ராகுல் ப்ரீத் சிங் : கிறங்கடிக்கும் வைரல் பிக்ஸ்!
Published: May 25, 2023, 5:52 PM

பாடல்களை கேட்டால் வரிகளும், இசையும், இசையமைப்பாளரும் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில பாடல்களை கேட்டால் மட்டும் அதில் நடித்த கதாநாயகிகளோ அல்லது கதாநாயகர்களோ தான் கண் முன்வந்து நிற்பார்கள். அந்த வகையில் கியூட்டான ஹீரோயின், அல்டிமேட் மாடல் என்றெல்லாம் பன்முகத் திறமை கொண்டு விளங்குபவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமும், அதில் வரும் ‘லாலி லாலி’ பாடலும் தான் நினைவுக்கு வரும். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராகுல் ப்ரீத் சிங் தற்போது திரைப்பட ஷூட், மாடலிங் என பல துறைகளில் பிசியாக உள்ளார். என்னதான் வேலையில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது அவரின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, வித விதமான புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கிரங்கடிக்கச் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். வெள்ளை குலோப் ஜாமுன் போன்று தகதகவென மின்னும் அவரின் அழகில் ரசிகர்கள் மண்டியிட்டு விட்டார்கள் என்றே கூறலாம். புகைப்படம் ரசிகர்களுக்காக மட்டுமா?... என கமெண்டுகளில் பலர் கேள்வி கேட்டாலும், இவர்களின் துறையில் நிலைத்து நிற்க இதுபோன்ற போட்டோ ஷூட், வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வந்தே ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

