தமிழ்நாடு

tamil nadu

மீண்டு(ம்) நடிக்க வருகிறார் மக்கள்‌ நாயகன் ராமராஜன்

By

Published : Sep 18, 2022, 5:35 PM IST

நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார்.

மீண்டும் வருகிறார் மக்கள்‌ நாயகன் ராமராஜன்!
மீண்டும் வருகிறார் மக்கள்‌ நாயகன் ராமராஜன்!

தமிழ் சினிமாவில் கிராமத்து நாயகனாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர், ராமராஜன். 'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்‌பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன. குறிப்பாக கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்து வெளியான 'கரகாட்டக்காரன்' திரைப்படம் வருடக்கணக்கில் ஓடி சாதனைப் படைத்தது.

மீண்டும் வருகிறார் மக்கள்‌ நாயகன் ராமராஜன்

அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்‌ என்ற உறுதியுடன் இருந்தவரின் மார்க்கெட் சரியத் தொடங்கியது. இறுதியாக கடந்த 2012ஆம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்திருந்தார். பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்தவர் அரசியலில் சில காலம் பயணித்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது புதிய படத்தில் நடிக்க உள்ளார். சாமானியன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராகேஷ் என்பவர் இயக்குகிறார். இதில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் உருவாகிறது.

இதையும் படிங்க: வினய் ராய் நடிக்கும் மர்டர் லைவ் - படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details