தமிழ்நாடு

tamil nadu

பார்வையற்றோரும் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் 'மாயோன்’

By

Published : Apr 17, 2022, 3:38 PM IST

சிபிராஜ் நடித்துள்ள 'மாயோன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் 'மாயோன்’
பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் 'மாயோன்’

சென்னை: இன்றைய திரையுலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது போலவே, தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன், அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என்று வெளியாகி ரசிகர்களை கவரும். இதுபோன்ற ப்ரோமோஷன்களில் படக்குழு வித்தியாசமாக எதையாவது செய்வது வழக்கம்.

அந்த வகையில் 'மாயோன்' படக் குழு, இந்தியாவில் யாரும் செய்திராத வகையில், பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் தங்களது பட டீசரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டது. இந்த புதிய முயற்சிக்கு ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.

இதையடுத்து இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த 'மாயோனே..' எனத் தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்ற ‘ழ்’ என்ற சொல் குறித்து பெரிய அளவில் விவாதங்களும் கிளம்பின. பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது.

இதையடுத்து 'சிங்கார மதன மோகனா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கிளம்பியது. இதனிசையே தணிக்கைக்காக சென்ற மாயோன் படத்திற்கு ஒரு காட்சியைக்கூட நீக்காமல் 'யு' சான்றிதழ் கிடைத்தது.

இந்த நிலையில் 'மாயோன்' திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் முழு படத்தையும் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகள் உணர்ந்து கொள்ளும் வகையில் படத்தின் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அங்கே ஒன்றுதான், இங்கே ஆயிரம் இருக்கு - இயக்குனர் பேரரசு!

ABOUT THE AUTHOR

...view details