தமிழ்நாடு

tamil nadu

அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஜவான் படக்குழு பங்கேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 3:59 PM IST

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஜவான் திரைப்பட குழுவினர் அட்லீ, ஷாருக்கான், நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நேற்று (செப்.19) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த முறையும் பாலிவுட் நட்சத்திரங்கள் பல பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இதில் முக்கியமாக ஜவான் படக்குழுவினர் இந்த விழாவில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஷாருக்கான் தனது மனைவி கௌரி கான் மற்றும் மனைவியின் தாயார் சவிதா சிப்பேர் ஆகியோருடன் கலந்து கொண்டார். மேலும், ஜவான் பட இயக்குநர் அட்லீ, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஷாருக்கான் பதானி உடையில் இருந்தார். அவரது மனைவி பாரம்பரிய உடையிலும், ஷாருக்கானின் மகள் சுஹைனா வெள்ளை நிற ஆடையிலும் கலந்து கொண்டனர். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்தபடி வந்த நயன்தாரா, வெள்ளை நிற காஸ்ட்யூமில் இருவரும் பளிச்சென்று காட்சியளித்தனர்.

ஜவான் திரைப்பட இயக்குநர் அட்லீ பாரம்பரிய உடையிலும், அவரது மனைவி ப்ரியா மஞ்சள் ஷாரரா உடையில் கலந்து கொண்டனர். ஜவான் படக்குழு மட்டுமல்லாது பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் அலியா பட், ஐஷ்வர்யா ராய், சல்மான் கான், கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஜவான் திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. ஜவான் பட வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு பல பாலிவுட் பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் ஜவான் பட வெற்றிக்கு அடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டுங்கி படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: Made in India: தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் ராஜமௌலி!!

ABOUT THE AUTHOR

...view details