தமிழ்நாடு

tamil nadu

‘ராக்கெட்ரி’ படம் பார்க்காமலேயே பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!

By

Published : Jul 6, 2022, 1:45 PM IST

நடிகர் மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் குறித்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

ராக்கெட்ரி திரைப்படத்தை பார்க்காமலேயே மாதவனை பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!
ராக்கெட்ரி திரைப்படத்தை பார்க்காமலேயே மாதவனை பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!

நடிகர் மாதவன் இயக்கி, நடித்த படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இப்படம் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான் என பல்வேறு திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ராக்கெட்ரி படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ராக்கெட்ரி படத்திற்கு வரும் விமர்சனத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படத்திற்காக தனது ஆன்மாவை கொடுத்து கடுமையாக உழைத்த எனது நண்பர் மாதவனுக்கு எனது வாழ்த்துகள். ராக்கெட்ரி படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்

இதையும் படிங்க: ”ராக்கெட்ரி” படத்தை பார்த்துவிட்டு மாதவனை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

ABOUT THE AUTHOR

...view details