தமிழ்நாடு

tamil nadu

விரைவில் வெளியாகும் கேப்டன் மில்லர் டிரெய்லர்.. தனுஷ் வைத்த ட்விஸ்ட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 12:14 PM IST

Captain Miller trailer: பொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விரைவில் வெளியாகும் கேப்டன் மில்லர் டிரெய்லர்
விரைவில் வெளியாகும் கேப்டன் மில்லர் டிரெய்லர்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான "வாத்தி" திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் தனது முதல் படமான 'ராக்கி' மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். பின்னர் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘சாணிக்காயிதம்' திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வருகிறார்.

தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கேப்டன் மில்லர் திரைப்படம் 1930-40 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் எப்படி புரட்சியாளராக மாறுகிறான் என்பதே இப்படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்தது. கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதனையடுத்து விரைவில் கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்றும், பொங்கல் வெளியீடு என்றும், நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், கேப்டன் மில்லர் படத்தில் மிகவும் ஸ்டைலான லுக்கில் உள்ள புகைப்படத்தையும் தனுஷ் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: “நான் படத்தைப் பார்க்கிறேன்”.. சம்பவம் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - கிளிண்ட் ஈஸ்ட்வுட் ரியாக்‌ஷன்!

ABOUT THE AUTHOR

...view details