தமிழ்நாடு

tamil nadu

நாட்டுப்புற கலைஞர்களுக்கான ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்’; அந்தோனி தாசனின் புதிய முயற்சி

By

Published : Dec 17, 2022, 7:37 AM IST

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோனி தாசன் நாட்டுப்புற கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley records)’ என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.

நாட்டுப்புற கலைஞர்களுக்கான ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்’
நாட்டுப்புற கலைஞர்களுக்கான ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்’

நாட்டுப்புற கலைஞர்களுக்கான ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்’

சென்னை: ஒரு சாதாரண நாட்டுப்புற பாடகராக இருந்து சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்து, தனது கடின உழைப்பால் முன்னேறியவர் அந்தோணி தாசன். கரகாட்டக்காரர், நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமைகளையும் கொண்டவர்.

தன்னைப் போல பல நாட்டுப்புற கலைஞர்களை உருவாக்கும் நோக்கில் ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley records)’ என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌. இதன் தொடக்க விழா நேற்று (டிசம்பர் 16) சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பாடகி சின்னக் குயில் சித்ரா, பாடகரும் இசை அமைப்பாளருமான பிரதீப் குமார், இயக்குநர் சீனு ராமசாமி, கானா பாலா, பாடகி மாலதி, கிடாக்குழி மாரியம்மாள், மகாலிங்கம், ஆந்தைக்குடி இளையராஜா, ஆக்காட்டி ஆறுமுகம் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பாடகி சித்ரா, “எல்லோரையும் போல நானும் அந்தோணி தாசனின் ரசிகைதான். நாட்டுப்புற கலைஞர்களுக்காக அந்தோணி தாசன் எடுத்துள்ள இந்த புதிய‌முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இதையும் படிங்க:சென்னையில் தொடங்கிய 'சூர்யா 42' படப்பிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details