தமிழ்நாடு

tamil nadu

தயாரிப்பாளராகும் திட்டம் இல்லை: ஆர்.ஜே.பாலாஜி பளீச்

By

Published : Feb 9, 2023, 6:50 AM IST

சென்னையில் 'ரன் பேபி ரன்' திரைப்பட நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தயாரிப்பாளர் ஆகும் திட்டம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளராகும் விருப்பம் தனக்கு இல்லை- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி!
தயாரிப்பாளராகும் விருப்பம் தனக்கு இல்லை- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி!

தயாரிப்பாளராகும் விருப்பம் தனக்கு இல்லை- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி!

சென்னை:நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'ரன் பேபி ரன்' திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன், விவேக் பிரசன்னா, ராஜ் ஐயப்பா, இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடிகர் விவேக் பிரசன்னா: "முதல் நாள் இந்த படத்தை பார்க்கும் போதே எனக்கு தெரிந்து விட்டது. இந்த படம் வெற்றி பெறும் என்று. என்னுடைய இயக்குனருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு. நான் 4 முறை இந்த படத்தை பார்த்து விட்டேன். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும்" நன்றி என தெரிவித்தார்.

இயக்குனர் கிருஷ்ணகுமார்: "எனக்கு இதெல்லாம் புதிதாக உள்ளது. படம் முதல் வாரம் சிறப்பாக ஓடியது. இரண்டாவது வாரமும் நன்றாக போய்கொண்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. சிறிய சிறிய கதாபாத்திரம் கூட நன்றாக நடித்துள்ளனர். நான் இங்கு வரும் போது என்னுடைய உதவி இயக்குனர் 3 பேர் உடன் தான் வந்தேன். பிறகு இங்கு உள்ளவர்களுடன் வேலை செய்தேன். எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்தார்கள்" என்றார்.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி: "இது ஒரு சிறிய படம். படம் நல்லா இருக்கிறது என்று ஒரு பேச்சு பரவி தான் மக்கள் வருவார்கள். முதல் காட்சிக்கு 5000 ரசிகர்கள் வரும் அளவிற்கு இது பெரிய படம் இல்லை. இதை எப்படி மக்கள் பார்ப்பார்கள் என்ற சந்தேகம் இருந்தது. பெரிய பெரிய திரையரங்குகளில் எங்களுக்கு காட்சிகள் ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு சீரியஸ் கதாபாத்திரம் நடிப்பது ரொம்ப கஷ்டம். காமெடியா கத்தி பேசுறது சுலபமாக இருக்கும். சினிமாவில் இருந்து நிறைய நடிகர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய இந்த படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சி, அதே போல அடுத்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எனக்கு மோதிரம் எல்லாம் போட்டார். அவரும் மகிழ்ச்சி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி "இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது நடிகை ஊர்வசி மேடம் தான். அவருடன்‌ நடிக்கும் போது மிகவும் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் 1000 திரைகள் தான் உள்ளது. எல்லா பண்டிகைகளுக்கு பெரிய படங்கள் வருகிறது. மீதி உள்ள நேரங்களில் தான் மற்ற படங்கள் வர முடியும். இனி தமிழ் சினிமா இப்படித்தான் இருக்கும்.

படங்களுக்கு என்னால் முடிந்த புரொமோஷன் செய்கிறேன். அதற்காக ஒரு புரொமோஷன் நிறுவனம் தொடங்கி என்னுடைய குழு மூலமாக அதை செய்து வருகிறேன். அடுத்து 2 படங்கள் நடித்து வருகிறேன். ஒரு படம் நடித்து முடித்து விட்டேன். மற்றொரு படம் நடிச்சிட்டு இருக்கேன். நல்ல படம் அதுவே புரொமோஷன் செய்து கொள்ளும் என்பது உண்மை தான். அப்படி இல்லை என்றால் நான் இங்கு பேசும் போது கூச்சமாக இருக்கும். என்னுடைய திறமையை வைத்து என்னால் முடிந்ததை செய்கிறேன். தற்போது வரை படங்கள் தயாரிக்கும் விருப்பம் தனக்கு எதுவும் இல்லை" என்றார்.

இதையும் படிங்க:கல்வி அரசியல் பேசும் 'வாத்தி' டிரெய்லர் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details