தமிழ்நாடு

tamil nadu

'48 மணி நேரமாக தூங்கவில்லை' - 'லால் சிங் சத்தா' ரிலீஸ் குறித்து அமீர்கான்!

By

Published : Aug 10, 2022, 3:09 PM IST

நடிகர் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளநிலையில், 'கடந்த 48 மணி நேரமாக தூங்கவில்லை; மேலும் இதனை சமாளிக்க ஆன்லைனில் புத்தகங்களைப் படித்து அல்லது செஸ் விளையாடி வருவதாக' அமீர் கான் தெரிவித்துள்ளார்.

48 மணி நேரமாக தூங்கவில்லை - ‘லால் சிங் சத்தா’ ரிலீஸ் குறித்து அமீர்கான்
48 மணி நேரமாக தூங்கவில்லை - ‘லால் சிங் சத்தா’ ரிலீஸ் குறித்து அமீர்கான்

நடிகர் அமீர் கான் நடிப்பில் நாளை (ஆக.11) வெளியாக உள்ள 'லால் சிங் சத்தா' படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலின் போது, ​​'அமீர்கான் தனது படம் வெளியீடு காரணமாக கடந்த 48 மணிநேரமாக தூங்க முடியவில்லை' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அமீர் கான் கூறுகையில், "நான் இப்போது மிகவும் பதற்றமாக இருக்கிறேன். 48 மணிநேரம் தூங்கவில்லை. நான் கேலி செய்யவில்லை. என்னால் தூங்க முடியவில்லை. என் மூளை அதிகமாக இயங்குகிறது. அதனால், நான் புத்தகங்களைப் படிக்கிறேன் அல்லது செஸ் விளையாடுவேன்'' என்றார்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி படம் வெளியான பிறகு என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு அமீர் கான் , "11ஆம் தேதிக்குப் பிறகு நானும், அத்வைத்தும் ('லால் சிங் சதா' படத்தின் இயக்குநர்) நிம்மதியாக தூங்குவோம் என்று நினைக்கிறேன். பிறகு நாங்கள் விழித்தவுடன் ரசிகர்கள் படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று சொல்வார்கள்”, எனத் தெரிவித்துள்ளார்.

அத்வைத் சந்தன் இயக்கியுள்ள, ’லால் சிங் சத்தா’ திரைப்படம், ஆங்கிலத்தில் அகாடமி விருது(ஆஸ்கர் விருது) பெற்று, 1994ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் முக்கிய பாத்திரத்தில் நடித்த 'ஃபாரஸ்ட் கம்ப்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி தழுவலாகும்.

இதையும் படிங்க:உதயநிதி அடுத்த படத்தின்‌ இயக்குநர் இவரா?

ABOUT THE AUTHOR

...view details