தமிழ்நாடு

tamil nadu

'வாரிசு' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய "7 ஸ்கிரீன் ஸ்டுடியோ"

By

Published : Nov 20, 2022, 8:32 PM IST

Screen
Screen ()

நடிகர் விஜயின் "வாரிசு" திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சென்னை: வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் "வாரிசு" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்து வருவதால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "ரஞ்சிதமே" என்ற பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' கைப்பற்றி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோதான் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details