தமிழ்நாடு

tamil nadu

Election Updates: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!

By

Published : Mar 11, 2021, 8:31 AM IST

Updated : Mar 11, 2021, 11:46 PM IST

assembly election 2021 live updates, tamilnadu assembly election 2021, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021, தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2021, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021, அதிமுக, திமுக, அமமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, வேல்முருகன், ஸ்டாலின், பழனிசாமி, dmdk, admk, dmk, pmk, vck, congress, bjp, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விசிக, naam tamilar, makkal needhi maiam, ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின், கமல் ஹாசன், திருமாவளவன், சீமான், seeman, kamal hassan, stalin, ops, eps, party alliance, கூட்டணிக் கட்சிகள், தேர்தல் பரப்புரை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள், tamil nadu election date 2021, dmk candidate list 2021, aiadmk candidate list, aiadmk alliance 2021, naam tamilar katchi candidate list 2021, naam tamilar katchi kolgai, தேர்தல் அறிக்கை 2021, election manifesto 2021, அமமுக, தமிமுன் அன்சாரி, கருணாஸ், டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், amma makkal munnetra kazhagam, ஓவைசி, ஏ ஐ எம் ஐ எம், aimim, தேமுதிக தேர்தல் சின்னம் முரசு
tamilnadu assembly election 2021

22:57 March 11

சிபிஎம் போட்டியிடும் 6 தொகுதிகள்

அண்ணா அறிவாலயத்தில் சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள்

  1. திருப்பரங்குன்றம்
  2. கந்தர்வக்கோட்டை (தனி)
  3. திண்டுக்கல்
  4. கோவில்பட்டி
  5. அரூர் (தனி)
  6. கீழ்வேளூர் (தனி)

22:19 March 11

பாமகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாமகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

3வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக. 

  • மேட்டூர் - சதாசிவம்
  • பூந்தமல்லி (தனி) - ராஜமன்னார்
  • சங்கராபுரம் - ராஜா
  • வந்தவாசி (தனி) - முரளி சங்கர்

21:34 March 11

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!

திமுக வேட்பாளர் பட்டியல்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை நாளை காலை 10:30 மணிக்கு திமுக வெளியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி முடிவு எட்டப்பட்ட நிலையில் 13 ஆம் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது.

21:13 March 11

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை தொடர் இழுபறி

அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான 5ஆம் கட்ட தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

கிட்டத்தட்ட தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாளை காலை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2 தொகுதிகளில் சிபிஎம் - திமுக இடையே குழப்பம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

21:09 March 11

அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • தஞ்சாவூர் - அறிவுடைநம்பி
  • பெரம்பலூர் (தனி) - இளம்பை தமிழ்ச்செல்வன்

20:48 March 11

அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு 6 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு 6 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசிற்கு (தமாகா) ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு

  • பட்டுக்கோட்டை
  • திருவிக நகர்
  • ஈரோடு கிழக்கு
  • லால்குடி
  • தூத்துக்குடி
  • கிள்ளியூர்

20:31 March 11

விசிக போட்டியிடும் 6 தொகுதிகள்

விசிக போட்டியிடும் 6 தொகுதிகள்

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிப் பட்டியல் அறிவிப்பு 

  • வானூர்(தனி)
  • காட்டுமன்னார்கோவில்(தனி)
  • செய்யூர்(தனி)
  • அரக்கோணம்(தனி)
  • நாகை
  • திருப்போரூர்

20:27 March 11

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு

  • கடையநல்லூர் - முகமது அபு பக்கர்
  • வாணியம்பாடி - முகமது நயீம்
  • சிதம்பரம் - அப்துல் ரகுமான்

20:15 March 11

மதிமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் வேட்பாளர் பட்டியலும் அறிவிப்பு

மதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

1.மதுராந்தகம் (தனி) - மல்லை சத்யா (மதிமுக துணை பொதுச் செயலாளர்)

2.வாசுதேவநல்லூர் (தனி ) - மருத்துவர் சதன் திருமலைக்குமார் (உயர்நிலை குழு உறுப்பினர்)

3. அரியலூர் - வழக்கறிஞர் சின்னப்பா (அரியலூர் மாவட்ட செயலாளர்)

4. சாத்தூர் - மருத்துவர் ரகுராம் (விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்)

5. மதுரை தெற்கு - பூதூர் பூமிநாதன் (மதுரை மாநகர மாவட்ட செயலாளர்)

6. பல்லடம் - முத்து ரத்தினம் (திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்)

19:32 March 11

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், முதலமைச்சருடனான சந்திப்பில் இதனை உறுதி செய்தார். 

18:59 March 11

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15  தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் பிற கூட்டணிக் கட்சிகள் 2 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. 

18:35 March 11

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்!

1. பொன்னேரி (தனி)

2. திருபெரும்புதூர் (தனி)

3. சோளிங்கர்  

4. ஊத்தங்கரை (தனி)

5. ஓமலூர்  

6. உதகமண்டலம்

7.கோவை (தெற்கு)

8. காரைக்குடி  

9. மேலூர்

10. சிவகாசி

11. திருவைகுண்டம்

12. குளச்சல்

13. விளவங்கோடு

14. கிள்ளியூர்

15. ஈரோடு கிழக்கு  

16.தென்காசி

17. அறந்தாங்கி

18. விருத்தாச்சலம்

19. நாங்குநேரி

20. கள்ளக்குறிச்சி (தனி)

21. திருவில்லிபுத்தூர் (தனி)

22. திருவாடானை

23. உடுமலைப்பேட்டை

24. மயிலாடுதுறை

25. வேளச்சேரி  

18:05 March 11

நன்றி உணர்வு இருந்தால், விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள் - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில்  ஈடுபட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் தெகுதியில் போட்டியிட உள்ள நா. பூங்குன்றன் , காட்பாடி தொகுதியில் போட்டியிட உள்ள திருக்குமரன் மற்றும் அணைகட்டு தொகுதியில் போட்டி உள்ள சுமித்ரா ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்ச். 11) வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய சீமான், 'பசித்து உணவு உண்கின்ற ஒவ்வொருவரும் நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு  வாக்களியுங்கள். இல்லையென்றால், சாப்பிடாமல் பட்டினியாக இருங்கள்' என்றார். 

17:34 March 11

கடம்பூர் ராஜு Vs டிடிவி தினகரன்

தேனி மாவட்டத்தில் நிற்பதாக அறிவித்த நிலையில், கடம்பூர் ராஜுவை எதிர்த்து கோவில்பட்டியில் டிடிவி தினகரன் களம்காண்கிறார்.

17:25 March 11

காலையில் டிடிவி தினகரனுடன் 'மீட்', மாலையில் 'சீட்'

காலையில் டிடிவி தினகரனை சந்தித்த ராஜவர்மனுக்கு, மாலையில் எம்.எல்.ஏ சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

17:11 March 11

அமமுகவில் களம்காணும் ராஜவர்மனுக்கு மீண்டும் கிடைத்தது சாத்தூர் தொகுதி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு அமமுகவில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

17:09 March 11

கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16:10 March 11

சேதுராமன் கட்சிக்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15:41 March 11

தேர்தல் பணப்பட்டுவாடா புகார்

தேர்தல் தொடர்பான பணப்பட்டுவாடா புகார் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

15:27 March 11

எஸ்டிபிஐ தொகுதிகள் பட்டியல்

அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, மதுரை மத்தி, பாளையங்கோட்டை,

திருவாரூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

15:08 March 11

தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அமமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டு வந்த தேமுதிகவினர், தங்களது பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டனர். இந்நிலையில் தேமுதிக தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

14:26 March 11

அதிமுகவில் இருந்து ராஜவர்மன் எம்.எல்.ஏ நீக்கம்!

சாத்தூர் சட்டப்பேரபை உறுப்பினர் ராஜவர்மன்

அதிமுகவில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசினார். இதை தொடர்ந்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜவர்மன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13:37 March 11

கொ.ம.தே.க போட்டியிடும் தொகுதிகள்!

கொ.ம.தே.க ஈஸ்வரன்

திமுக கூட்டணியில் சூலூர், பெருந்துறை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.

13:29 March 11

மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்!

பேராசிரியர் ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

12:51 March 11

பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில்!

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்.

12:05 March 11

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வால்பாறை, சிவகங்கை, பவானிசாகர், திருத்துறைப்பூண்டி, திருப்பூர் வடக்கு, தளி ஆகிய தொகுதிகளின் பெயர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உறுதிசெய்யப்பட்டுள்ளன.

11:55 March 11

அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் எங்களுடன் வருவார்கள் - டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

அதிமுகவில் சட்டப்பேரவைத் தேர்தல் 2021இல் போட்டியிட இடம் கிடைக்காத சாத்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் தினகரனை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அவர் அன்பின்பால் என்னை சந்திக்க வருகிறார். இன்னும் வருவார்கள். அமமுக ஆரம்பிக்கப்பட்டதே அதிமுகவை மீட்டெடுக்க தான். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் வருவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார். 

11:46 March 11

வேல்முருகன் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் த.வா.க உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று  அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

11:38 March 11

அதிமுக கூட்டணியில் தமாகா 12 தொகுதிகளை கோரியுள்ளது - ஜிகே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை கோரிவருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் தமாகா-வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. எனவே கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கும்படி கோரியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

10:51 March 11

அதிமுக தேர்தல் பரப்புரை வியூகம்: “மீண்டும் அதிமுக; வேண்டும் அதிமுக”

அதிமுக தேர்தல் பரப்புரை

அதிமுகவின் விளம்பர தொழில்நுட்பப் பிரிவு, தேர்தல் பரப்புரைக்காக புது வியூகம் வகுத்துள்ளது. அதன்படி, ‘மனம் நிறைந்த பத்தாண்டு; மக்கள் குறை தீர்த்த பத்தாண்டு’ என்றபடி பத்தாண்டு சாதனைகளை விளக்கும் விதமாக “மீண்டும் அதிமுக; வேண்டும் அதிமுக” என்ற இணைய பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.

10:39 March 11

மநீம தலைவர் மீது புகார்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தனிமனித விமர்சனம் செய்ததாகவும் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

10:27 March 11

அதிமுகவினர் மறியல்!

பூவிருந்தவல்லி தனித் தொகுதியை பாமகவுக்கு வழங்கியதை கண்டித்து அதிமுக தொண்டர்கள் நசரத்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

09:18 March 11

அதிமுக வேட்பாளர்கள் படிப்பு விவரம்

ஓபிஎஸ் - ஈபிஸ்

அதிமுக வெளியிட்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களின் படிப்பு விவரங்கள் குறித்து கீழே காணலாம்.  

  • இளநிலைப் பட்டதாரிகள் - 54
  • பள்ளிக்கல்வி மட்டும் முடித்தவர்கள் - 53
  • வழக்கறிஞர்கள் - 28
  • முதுநிலைப் பட்டதாரிகள் - 19
  • பட்டயப்படிப்பு - 8
  • பொறியாளர்கள் - 6
  • மருத்துவர்கள் - 3

07:46 March 11

தேர்தல் செய்திகள் உடனுக்குடன்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு?

திமுக தலைவர் ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள், அவர்கள் களம் காணும் தொகுதிகளின் பட்டியலை இன்று திமுக வெளியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதும் இன்று முடிவாகவுள்ளது.

Last Updated :Mar 11, 2021, 11:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details