தமிழ்நாடு

tamil nadu

பூண்டு மூட்டைகளுக்குக்கீழ் பதுக்கி வைத்திருந்த 1.15 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

By

Published : Oct 4, 2022, 5:03 PM IST

பூண்டு மூட்டைகளுக்கு கீழ் டன் கணக்கில் குட்காவை ஒளித்துவைத்து விற்பனை செய்து வந்த 5 நபர்களை தாம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பூண்டு மூட்டைகளுக்கு கீழ் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது
பூண்டு மூட்டைகளுக்கு கீழ் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப்பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் குட்கா, பான் மசாலா பொருட்கள் மறைமுகமாக கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாம்பரம், பல்லாவரம், திருநீர்மலை, குரோம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பான் மசாலா, புகையிலைப்பொருட்கள் இரவு நேரங்களில் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக தாம்பரம் போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தாம்பரம் உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் சார்லஸ் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் கண்ணியப்பன், காவலர் கார்த்திகேயன், தலைமை காவலர் வீராசாமி உள்ளிட்டோர் இரவு ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த ஐந்து நபர்கள் டாடா ஏஸ் வாகனத்தில் பூண்டு மூட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தனர்.

பூண்டு மூட்டைகளுக்குக்கீழ் பதுக்கி வைத்திருந்த 1.15 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தை நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது பூண்டு மூட்டைகளுக்கு கீழ் குட்காவை வைத்து கடைகளுக்கு விற்று வந்தது தெரியவந்தது. குட்காவை விற்பனை செய்துவந்த மனவாசகம், பிரவீன், மாரிமுத்து, பிரசாந்த், ஜெயா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பூண்டு மூட்டைகளுக்குக்கீழ் பதுக்கி வைத்திருந்த 1.15 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

பின்னர் அவர்களிடமிருந்து இருபது லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.15 டன் குட்காவையும், 2 நான்கு சக்கர வாகனங்கள், மூன்று செல்போன்கள், முப்பதாயிரம் பணம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவில்பட்டியில் கொரியர் வாகனத்தில் 350 கிலோ கஞ்சா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details