தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

By

Published : Mar 24, 2022, 11:09 PM IST

namakkal-school-student-suicide

நாமக்கல் அருகே அரசுப் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்மாவட்டம் வெப்படை அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 400 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மோடமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயின்று வந்த ரிதுன் என்ற மாணவன் இன்று பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென பள்ளியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் வெப்படை போலீசாருக்கும் ஈரோடு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பின் அங்கு வந்த போலீசார் உயிரிழந்த மாணவன் ரிதுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்நிலையில், பள்ளியில் மாணவன் ரிதுனை பள்ளி ஆசிரியர் ஒருவர் திட்டியதாகவும் வெயிலில் ஒரு மணி நேரம் நிற்க வைத்ததாகவும் இதனால் மனமுடைந்த மாணவன் கடிதம் எழுதி விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவனின் கடிதம் அந்த ஆசிரியரிடம் உள்ளதாகவும் அதனை வாங்கி அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் புதிதாக இன்று பதவியேற்ற எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

ABOUT THE AUTHOR

...view details