தமிழ்நாடு

tamil nadu

போலி நிருபர்கள் கைது

By

Published : Jul 26, 2021, 6:10 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட போலி நிருபர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Fake reporters
போலி நிருபர்கள்

ராமநாதபுரம்: தனியார் சூப்பர் மார்கெட்டிற்கு சென்ற 3 பேர் காலாவதி ஆன பொருட்களை விற்பதாக கூறி 50 ஆயிரம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் தாங்கள் யுனிவர்செல் நிருபர் என்று கூறியும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தனியார் சூப்பர் மார்கெட் உரிமையாளர் ஜவஹர் அலி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், மிரட்டல் விடுத்த முருகன், ரூபசீலன், வேல் முருகன் ஆகிய மூன்று போலி நிருபர்களை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டையும் கைப்பற்றினர்.

இதையும் படிங்க: சென்னையில் ரவுடி மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details